search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.சி.டி.வி. கேமரா"

    • சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம்.
    • நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி - கோழியூர் சாலையில் தனியார் நிறுவனம் உள்ளது. இதற்கு சொந்தமான வாகனத்தில் மூலம் பொருட்களை ஏற்றிச் சென்று மற்றவர்களுக்கு வழங்குவது வழக்கம். இந்த வாகனத்தை நிறுவனத்தின் உள்ளே நிறுத்தி வைப்பது வழக்கம். இந்நிலையில் நிறுவனத்தின் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த குட்டியானை வாகனம் இரும்பு வேலியின் மோதி நகர முடியாமல் நின்றி ருந்தது. இதனை பார்த்த நிறுவன உரிமையாளர் கார்த்திக் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து நிறுவனத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தார். அதில் மர்மநபர் ஒருவர் குட்டியானை வாகனத்தில் அமர்ந்து அதனை இயக்குகிறார். இந்த வாகனம் அருகில் இருந்த இரும்பு வேலியில் மோதி நிற்கிறது. இதனை வெளியில் எடுக்க முயற்சிக்கும் மர்ம நபர், குட்டியானை வாகனத்தை இயக்க முடியாததால், அங்கேயே விட்டு செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதனைக் கண்ட உரிமையாளர் கார்த்திக், இது தொடர்பாக திட்டக்குடி போலீசாரிடம் புகார் கொடுத்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை அழைத்து விசாரித்தனர். இதில் கருவேப்பிலங்குறிச்சியை அடுத்துள்ள கிளிமங்கலம் கிராமத்தை சேர்ந்த தங்கமுத்து மகன் விக்னேஷ் (வயது 24) என்பதும், இவர் தனியார் நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குட்டியானை வாகனத்தை கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திட்டக்குடி போலீசார் விக்னேஷை கைது செய்தனர். திட்டக்குடி பகுதியில் சைக்கிள், மோட்டார் சைக்கிள் போன்றவைகள் அடிக்கடி திருடி போயின. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பஸ், குட்டியானை போன்ற வாகனங்களும் திருடப்படுகின்றன. இந்த சம்பவம் திட்டக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மேலவளவு கிராம பகுதிகளில் சி.சி.டி.வி. கேமரா அமைப்பது குறித்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை நடந்தது.
    • சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு காவல் நிலை–யம். இதற்கு உட்பட்ட கிரா–மங்களில் குற்ற சம்பவங் களை தடுக்கும் பொருட்டு பொது இடங்களில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக மேல–வளவு போலீஸ் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர்க–ளுடன் கலந்தாய்வுக்கூட்டம் மேலூர் இன்ஸ்பெக்டர் மன்னவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத் தில் அ.வல்லாளப்பட்டி பேரூராட்சி சேர்மன் கும–ரன்,

    மேலவளவு ஊராட்சி மன்ற தலைவர் தங்கம் மலைச்சாமி, கிடாரிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா மதிவாணன், சேக்கிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பிரபு,அ.வலையபட்டி ஊராட்சி மன்ற தலைவர் தீபா தங்கம், மேலவளவு சப்-இன்ஸ் பெக்டர் பிரகாஷ் தனிப் பிரிவு ஏட்டு ரஞ்சித் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    • பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை நடைபெறும்
    • பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அனுப்பர்பாளையம் புதூர் அவினாசி சாலையில் அமைந்துள்ள கனரா வங்கி கிளையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம் சார்பில் சிசிடிவி., கேமரா உபகரணங்கள் பற்றிய இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளது.

    இதில் கலந்து கொள்வோர் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 4 உடன் 14ந்தேதி( திங்கள் கிழமை) வங்கி கிளையில் நடைபெறும் நேர்காணனில் கலந்து கொள்ள வேண்டும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பங்கு பெற முடியும். இந்த பயிற்சிக்கு எவ்வித கட்டணமும் கிடையாது. பயிற்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 5.30 வரை.

    பயிற்சி காலத்தில் காலை, மாலை தேநீர், மதிய உணவு, பயிற்சி உபகரணங்கள் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். தொழில் தொடங்க கடன் ஆலோசனைகள் வழங்கப்படும். தொழில் பயிற்சி மட்டுமன்றி தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியும் கற்றுத்தரப்படும். மேலும் தொடர்புக்கு 9952518441, 8610533436, 9489043923 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை
    • பெண் கொள்ளையர்கள் கைவரிசையா?

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் இட லாக்குடி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடுக்கரையில் உள்ள கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து பஸ்ஸில் ஊருக்கு புறப்பட்டார்.

    அண்ணா பஸ் நிலையத்திற்கு வந்து இறங்கிய இளம்பெண் பின்னர் இடலாகுடிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறினார். இடலாக்குடி பகுதியில் பஸ்சை விட்டு இறங்கிய போது தான் வைத்திருந்த கைப்பையை பார்த்தபோது அதில் இருந்த ரூ. 40 ஆயிரம் மாயமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந் தார். அவர் அந்த பகுதியில் பணத்தை தேடினார். ஆனால் பணம் கிடைக்க வில்லை.

    இதுகுறித்து கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பணத்தை பறிகொடுத்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். அப்போது அண்ணா பஸ் நிலையத்திலிருந்து பஸ்சில் தன்னுடன் 2 பெண்கள் நெருக்கி கொண்டு இருந்ததாகவும் அவர்கள் திடீரென தான் இறங்குவதற்கு முந்தைய பஸ் நிறுத்தத்தில் இறங்கிவிட்டதாகவும் கூறினார். எனவே அந்தப் பெண்கள் தான் பணத்தை திருடி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக் கிறார்கள்.

    இதையடுத்து அண்ணா பஸ் நிலையத்தில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெண்ணிடம் கைவரிசை காட்டியது வெளியூரை சேர்ந்த பெண் கொள்ளையராக இருக்க லாம் என்று போலீ சார் சந்தேகிக்கிறார்கள். அதன் அடிப்படையில் பழைய பெண் கொள்ளையர்களின் பட்டியலை தயாரித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே அண்ணா பஸ்நிலையத்தில் கடந்த சில நாட்களாகவே பிக்பாக்கெட், திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனி கவனம் செலுத்தி கூடுதல் போலீசாரை நியமனம் செய்து ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    • சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை
    • முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? என விசாரணை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி சுபாஷ் நகர் பகுதியில் உள்ள கோவிலின் முன் பகுதியில் நேற்று மதியம் ஆண் குழந்தை ஒன்று கிடந்தது.

    துணியால் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்த னர். உடனடியாக குழந்தை யை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரல்வாய்மொழி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். செவிலியர்கள் ஜெயா மற்றும் நித்தியா ஆகியோர் குழந்தையின் உடல் நிலையை பரிசோதித்தனர்.

    பின்னர் குழந்தையின் உடலை சுத்தப்படுத்தி உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பிறந்த ஓரிரு நாட்களே ஆன குழந்தையை கோவில் வாசலில் வீசி சென்றது யார் என்று தெரியவில்லை.

    இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றியும் ஆய்வு நடத்தி வருகிறார்கள். முறை தவறி பிறந்ததால் குழந்தையை வீசி சென்றார்களா? வேறு ஏதாவது காரணமா? என்பது குறித் தும் விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.

    மேலும் அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோவாளை சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான செங்கல் சூளைகள் உள்ளது. அங்கு வட மாநில பெண்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    அவர்கள் யாராவது குழந்தையை வீசி சென்றார்களா? என்ற கோ ணத்தில் விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. பிள் ளைக்காக எத்தனையோ குடும்பங்கள் தவம் இருந்து வரும் நிலையில் பெற்ற குழந்தையை கல் மனதுடன் வீசி சென்ற தாயை போலீ சார் தேடி வருகிறார்கள்.

    • சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது.
    • போலீசார் துப்பு துலக்க முடியாமல் தினறி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களிலும், முக்கிய சந்திப்புகளிலும் சில வருடங்களுக்கு முன்பாக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டது. இதனை போலீசார் கண்காணிக்க, மரக்காணம் போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு அறை அமைக்கப் பட்டது. இவ்வாறு பல லட்சம் செலவில் மரக்காணம் சன்னதி தெரு, பள்ளிக்கூட தெரு, புதுவை ரோடு, மேட்டுத் தெரு, சக்திநகர், சால் ரோடு, பஸ் நிலையம் போன்ற இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் அமைக்கப்பட்டது.

    இந்த சி.சி.டி.வி. கேமராக்களில் பெரும்பா லானவை, அதாவது 90 சத வீதத்திற்கு மேல் பணி செய்ய வில்லை. இதனை சீர்செய்ய போலீசாரும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதனால் முக்கிய இடங்களில் நடக்கும் சமூக விரோத செயல்களில் போலீசார் துப்பு துலக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக குடியிருப்பு பகுதிகளில் கொலை, கொள்ளை போன்றவைகள் நடக்கும் போது, அங்குள்ள மக்களிடம் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த போலீசார் வலியுறுத்துகின்றனர். ஆனால், அரசால் அமைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களின் பழுதுகளை நீக்கி சரி செய்ய போலீசாருக்கு மனம் வரவில்லை.

    எனவே, மரக்காணம் நகரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை சரி செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவர போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    • காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும்.
    • பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை முற்றிலும் ஒழிப்பது, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பல்வேறுபட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளை ஏற்படுத்துவது தொடர்பான, 3ம்கட்ட இறுதி ஆலோசனைக் கூட்டம், காரைக்கால் காமராஜர் அரசு வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணை கலெக்ட ர்(வருவாய்) ஜான்சன் தலைமை தாங்கினார். துணை கலெக்டர்(பேரிடர் மேலாண்மை) பாஸ்கரன், போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சித் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல் படை, காரைக்கால் நகராட்சி, கல்வித்துறை, சமூக நலத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    அனைத்து துறை அதிகாரி களின் ஆலோ சனைகளை கேட்டறிந்த, துணை கலெக்டர் ஜான்சன் பேசியதாவது:-காரைக்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள 154 மருந்து கடைகளிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட வேண்டும். மருந்துகள் சரியான விலைக்கு விற்கப்ப டுகிறதா?, காலாவதியான மரு ந்துகள் விற்கப்படுகிறதா? என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்யவேண்டும். காரைக்கால் கடலில் இயங்கும் அனைத்து படகு களில் அரசு அறிவுறுத்திய வண்ணம் பூசப்பட வேண்டும். தேசியக்கொடியை பறக்க விட வேண்டும். வரிசை எண்ணை எழுதி வைக்க வேண்டும். அதேபோல், அனைத்து படகுகளிலும் பையோமெட்ரிக் கருவி பொருத்த வேண்டும். மேலும் இரவு நேரத்தில் சந்தேகப்படும்படியாக படகுகள், கடலில் வலம் வந்தால் மீனவர்கள் சம்மந்தப்பட்ட துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

    மேலும், போலீசார், கல்வித்துறையுடன் இணைந்து மாணவர்கள் மத்தியில் பல்வேறு விழிப்பு ணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். பள்ளிகள் அருகில் 100 மீட்டருக்குள் பெட்டி கடைகளை அனுமதிக்க கூடாது. அப்படி இருக்கும் பட்சத்தில், அக்கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். போதை, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். பள்ளிகளில் ஒவ்வொரு வெள்ளி க்கிழமையும் மாலை நேரத்தில், கல்வித்துறையும் மற்றும் போலீசாரும் இணைந்து மாணவ ர்களிடையே போதைப் பழக்கத்தின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் தங்கள் பகுதிகளில் பெட்டிகடை மற்றும் பல்வேறு கடைகளை அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும். முக்கியமாக, காரைக்கால் மாவட்டத்தில், அனைத்து அரசுத் துறைகளும் ஒன்றிணைந்து செயல்ப ட்டால், அரசால் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொரு ட்களை முற்றிலும் ஒழிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவன் துணிகரம்
    • சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது 37), மீன் பிடித்தொழிலாளி.

    இவரது மனைவி டெனிலா (33), நேற்று தனது 3 வயது பெண் குழந்தையுடன் குறும்பனை திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தார். மதிய வேளையில் மண்டபத்தின் முன்பு உள்ள மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மண்டபம் நோக்கி வந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த டெனிலாவின் 3 வயது மகள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

    இதை பார்த்தவர்கள் சப்தமிட்ட படியே வாலிபரை பிடிக்க முயன்ற னர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இதனால் திருமண மண்டபம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து குளச்சல் போலீசில் டெனிலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருமண மண்டபம் முன்பு சிறுமியிடம் செயின் பறித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • குடிகாடு கிராமத்தில் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்பட்டுள்ளது
    • உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார்

    உடையார் பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் குடிகாடு கிராமத்தில் வெளிநாடு வாழும் இளைஞர்கள் சார்பில் குடிகாடு கிராமத்தில் முக்கிய வீதிகளில் 16 சிசிடிவி கேமராவை அமைத்தனர். அதனை உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் வேலுச்சாமி திறந்துவைத்தார். பின்னர் அவர் தெரிவிக்கையில், குடிகாடு கிராமத்தில் சிசிடிவி கேமரா மூலம் பல்வேறு குற்றங்களை தடுக்க முடியும். இதே போல் அனைத்து கிராமங்களிலும், சிசிடிவி கேமரா வைப்பதற்கு இளைஞர்களும், பொதுமக்களும், ஊர் முக்கியத்துவம் முன்வர வேண்டும் என்றார்.

    • அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது
    • கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காரை தேடி வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிசுனாமி காலனி கிளாரட்நகர் பகுதியைசேர்ந்தவர் அருண் (வயது29).இவர் மீனவர் ஆவார். இவர் கடலில் மீன்பிடிக்கும் தொழில்செய்துவந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணி அளவில் தனதுநண்பரான கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள சுனாமி காலனியை சேர்ந்த ஆல்பர்ட் (வயது 35) என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சிலுவை நகர் பகுதியில் இருந்து நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    கன்னியாகுமரி ரெயில்வே மேம்பாலம் அருகே நான்கு வழி சாலையில் தனது நண்பர் ஆல்பர்டை இறக்கி விட்டு விட்டு வீட்டுக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் திருப்பினார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட அருண்சம்பவஇடத்திலே யே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை கைப்பற்றி அதில் பதிவாகி இருந்த காரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.

    • உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார்
    • அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது
    • அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகர்கோவில், அக்.27-

    ஈத்தாமொழி வண்டா விளை பகுதியைச் சேர்ந்தவர் ஆதி சிவசாமி. இவரது மனைவி தங்கம் (வயது 61). இவர் சம்பவத்தன்று உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பஸ்ஸில் வந்து இறங்கினார். பெருஞ்செல்வ விளை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகை மாயமாகி இருந்தது . இதன் மதிப்பு 2 லட்சத்து 70 ஆயிரம் ஆகும். இதுகுறித்து தங்கம் ஆசாரிப்பள்ளம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர்.அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சி களை கைப்பற்றி போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    • கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை
    • கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்

    நாகர்கோவில் :

    குளச்சல் துறைமுகத்தெருவை சேர்ந்தவர் ஜோசப் பவின் (வயது 39).

    இவர் தற்பொழுது நாகர்கோவில் குருசடி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மேலும் செட்டிகுளம் பகுதியில் துணிக்கடை வைத்துள்ளார்.

    நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.இன்று காலையில் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் புகுந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கடையில் இருந்த விலை உயர்ந்த துணிகள் மாயமாகி இருப்பதாக ஜோசப் பவின் தெரிவித்தார்.

    கடையின் மேல் பகுதி உடைக்கப்பட்டு இருந்தது.மர்ம நபர்கள் அதன் வழியாக கடைக்குள் புகுந்து துணிகளை திருடிச் சென்று இருப்பது தெரிய வந்தது.

    கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது.அதில் கொள்ளையன் கடைக்குள் வருவது போன்ற காட்சிகள் பதிவாகி உள்ளது. கொள்ளையன் உடல் முழுவதையும் மூடி க்கொண்டு கடைக்குள் சுற்றித் திரிகிறான்.

    அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர்.அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கடையில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்துள்ளனர்.கொள்ளை சம்பவம் குறித்து கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×